இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளர் ஒருவர் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை  (05)  இக்கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளரும் மாத்தறை மதுவரி நிலைய மதுவரித்திணைக்கள அதிகாரி  ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளர், மதுவரித் திணைக்களத்தின் களுத்துறை மதுவரி அதிகாரி மற்றும் அளுத்கம மதுவரி உற்பத்தி தொடர்பான பதில் அதிகாரி ஆகிய பதவிகளில் கடமையாற்றிய காலத்தில், தனது மேற்பார்வையின் கீழ் இயங்கிய சட்டபூர்வ உரிமம் பெற்ற நிறுவனமொன்றிற்குச் சொந்தமான கணக்குகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த நிறுவனத்தின் மதுபான உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய மதுவரி அதிகாரி என்ற ரீதியில், தனது உத்தியோகபூர்வ அதிகாரத்தின் கீழ் பெற்றுக்கொள்ள உரிமையில்லாத அந்த இலஞ்ச பணத்தை ஏற்றுக்கொண்டதாக மதுவரி அதிகாரிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.