மேலும் முன்னிலைப்படுத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் (சி.ஐ.டி ) குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதால் குறித்த சந்தேக நபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு 9இன் கீழ் சந்தேக நபர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் சி.ஐ.டியினருக்கு பகல் 1 மணிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில், குறித்த அனுமதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் இருந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் சி.ஐ.டியினர் நகர்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் சி.ஐ.டியினர் விசாரணைக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது எனத் தெரிவித்தார்.