சென்னையின் முக்கிய அடையாளமான மயிலாப்பூர் தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு என உறுதியான அன்றே, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் பிரச்சார வாகனத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வலம் வந்தார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே பிரச்சாரத்துக்கு வந்தது குறித்து கேட்டதற்கு, தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆனாலும், தொடர்ந்து மயிலாப்பூரில் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
மயிலாப்பூரில் களப்பணியைத் தொடங்கிய தமிழிசை
Ad Space
Ad Space
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே, மயிலாப்பூரில் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். கபாலீஸ்வரர் பங்குனித் தேரோட்ட விழாவில் நேற்று அவர் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
Ad Space
Ad Space