யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்திக் காணி உரிமையாளர்களால் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மீட்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (30.10.2026) 28 ஆவது வாரமாக யாழ்.மயிலிட்டி கொமாண்டோப் பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.