குருணாகலில் ராஜபிஹில பூங்கா அருகில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று புதன்கிழமை (28) காலை 9 மணியளவில் இந்த மரம் வீழ்ந்துள்ளது. 

எனினும், மரம் வீழ்ந்ததில் உயிராபத்து ஏதும் நேரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்கள் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த போதே மரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.