மருதங்கேணியில் 13 ஆவது யாழ்.மாவட்டச் செயலர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள்
Ad Space
Ad Space
2026 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது யாழ்.மாவட்டச் செயலர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை (04.07.2026) காலை-09 மணி முதல் மருதங்கேணிப் பொது விளையாட்டு மைதானத்தில் யாழ்.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபரப் பிரதிப் பணிப்பாளருமான எம். வித்தியானந்த நேசன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மதகுருமார்களின் ஆசியுரையைத் தொடர்ந்து யாழ்.மாவட்டச் செயலர் பிரதீபனால் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. போட்டிகளில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
Ad Space
Ad Space