காலஞ்சென்ற முன்னாள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெருமவின் மனைவியான ஷெரின் தேவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ளது.
சாதி, மத மற்றும் அரசியல் வேறுபாடுகளின்றி தனது சொந்தத் தொகுதி, மாவட்டம் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கும் பாலித தேவரப்பெரும ஆற்றிய மக்கள் சேவைகளுக்குப் பின்னால் ஒரு முக்கிய தூணாக பலமாக ஷெரின் தேவரப்பெரும திகழ்ந்தார்.
பாலித தேவரப்பெருமவின் மறைவுக்குப் பின்னர், அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளைத் தொடர்வதிலும் அவரது குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பதிலும் இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் இன்றையதினம் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.