மஹர சிறையிலிருந்து 104 கைதிகள் 7 சிறைச்சாலைகளுக்கு மாற்றம்
Ad Space
Ad Space
மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் தும்பர,வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் , ஊடகப் பேச்சாளருமான ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மாற்றம் செய்யப்பட்டுள்ள குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் சிறைச்சாலைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளைப் பார்வையாளர்கள் பார்வையிடுவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space