முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை (18) தொலைபேசி ஊடாகத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, 1945-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் திகதி பிறந்தார் என்பதுடன், இன்று தனது 81-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்ததுடன், பின்னர் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.