மாத்தறை - தலல்ல வீதியின் வஜிரவங்ச மாவத்தை பகுதியில் இன்று (26) வெள்ளிக்கிழமை இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி பகுதியிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், தங்காலை பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றுமே இவ்வாறு ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாத்தறை மற்றும் பதீகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மாத்தறை - தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40க்கும் மேற்பட்டோர் காயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space