மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு
Ad Space
Ad Space
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இன்று (08) திங்கட்கிழமை அதிகாலை மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தகராறில் மருமகன் மீது மாமனார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்தே மருமகன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space