மாவிலாற்றில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு
Ad Space
Ad Space
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலாறு பகுதியில், வெடிக்காத நிலையில் இருந்த 61 ரகத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் சனிக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
மாவிலாறு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தபோது, இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதையடுத்து, குறித்த மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Ad Space
Ad Space