போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, மிரிஹானை வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போலி முறையில் அச்சிடப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள்கள் 07, 1,000 ரூபா நாணயத்தாள்கள் 06, 500 ரூபா நாணயத்தாள்கள் 01 மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கணினி , ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஆவார்.
மேலும், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (09) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிரிஹானையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space