மீகொட சந்திக்கு அருகில் நடைபெற்ற வெசாக் தானசாலையொன்றில் இடம்பெற்ற விபத்திற்கு காரணமான வாகன சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீகொட சந்திக்கு அருகில் நடைபெற்ற வெசாக் தானசாலையொன்றில் மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று பாய்ந்து இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (01) திங்கட்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீகொட விபத்து: 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சாரதிக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space