மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
Ad Space
Ad Space
மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (17) புதன்கிழமை சான்றுரைப்படுத்தினார்.
இச்சட்டமூலம் 2026.03.17ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டிற்காகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், 2026.05.06ஆம் திகதி இது விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன் ஊடாக மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டம், 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டம், 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் மற்றும் 1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டம் என்பன திருத்தப்படுவதுடன், கடனிறுக்கவகையின்மை (97வது அத்தியாயம்) கட்டளைச் சட்டத்தை நீக்குகிறது.
இந்தச் சட்டம், கடனாளியின் நியாயமான வருமானம் மற்றும் அத்தியாவசிய சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கடன் பாதுகாப்பு, தற்காலிக விடுப்பு மற்றும் மறுசீரமைப்பு விதிகள் போன்ற தனிநபர் கடனிறுக்கவகையின்மை குறிப்பிட்ட நடைமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
Ad Space
Ad Space