மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ.20,000-ஆக வழங்கப்படும்..!- விஜய்
Ad Space
Ad Space
கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு திட்டங்கள் அறிவித்தார்.
மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ.8,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்..மேலும் அவர், " சிறை பிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை படகு பாதுகாப்பு நிதியாக ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும்.கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும்.மீனவர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.15 வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும்.பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும்.சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும்\" என்றார்.
Ad Space
Ad Space