முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (31) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க போதராகம, இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோத ஈட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிணை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space