மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தனது 61ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பு அரசியல் மற்றும் சமூக துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஜெயானந்தமூர்த்தியின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space