தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி வில​கக் கோரி சென்​னை​யில் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர் அமைப்​பினர் கைது செய்​யப்​பட்​டனர்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்​தி, சென்னை தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலுவலகத்தை முற்​றுகை​யிட சிவானந்தா சாலை​யில் இருந்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அனைத்​திந்​திய இளைஞர் பெருமன்​றம் (ஏஐஒய்​எஃப்) மற்​றும் அனைத்​திந்​திய மாணவர் பெரு​மன்​றத்​தினர் (ஏஐஎஸ்​எஃப்) நேற்று ஊர்​வல​மாக புறப்பட்டனர்.அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றத்​தின் மாநிலச் செய​லா​ளர் க.பாரதி தலை​மை​யில் நடந்த இந்​தப் போராட்​டத்​தில் 100-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அப்​போது அவர்​களை போலீ​ஸார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர். ஆனால், போராட்​டக்​காரர்​கள் மறுத்​த​தால் போலீ​ஸாருக்​கும், அவர்களுக்கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. தொடர்ந்து சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​ட​தால், போராட்​டத்​தில் ஈடுபட்​ட​வர்​களை போலீ​ஸார் குண்​டுக்​கட்​டாக கைது செய்து அங்கிருந்து அகற்​றி, திரு​வல்​லிக்​கேணி சமு​தாய நலக்​கூடத்​துக்கு அழைத்​துச்​சென்​றனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் க.பாரதி கூறுகை​யில், “மத்​திய அரசும், தேர்​தல் ஆணை​ய​மும் இணைந்து திட்​ட​மிட்டு எதிர்க்கட்சிகளின் வாக்​காளர்​களை நீக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்ற பெயரில் அரசியலமைப்பு சட்​டத்​தின் எவ்​வித விதி​முறையை​யும் பின்பற்றாமல் இந்த நீக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் இந்​தியா முழு​வதும் 13 கோடிக்​கும் மேற்​பட்ட வாக்காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார், மற்ற 2 தேர்​தல் ஆணை​யர்​களின் எதிர்ப்பை மீறி தன்​னிச்​சை​யாக முடிவு​களை எடுத்​துள்​ளார். எனவே, இதற்கு அவர் முழு பொறுப்​பேற்று உடனே தனது பதவியை ராஜி​னாமா செய்ய வேண்​டும். வாக்​காளர்​கள் நீக்​கத்​துக்கு காரணமானவர்கள் மீது சட்​டரீ​தி​யான நடவடிக்​கை எடுக்​க வேண்டும்​” என்​றார்​.