முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆவது ஆண்டில் டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி
vidiyel 17 வைகாசி 2026 · 05:16 7 views
Ad Space
Ad Space
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கண்காட்சி 16.05.2026 அன்று டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் ஆரம்பமானது. முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி, அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த அரச பயங்கரவாதம் எம் உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தது. அந்தக்காட்சிகளையே இன்று கண்காட்சிகளாக வைத்து, பல்லின மக்களுக்கு காட்டி, சர்வதேசத்திடம் எமது மக்களுக்கு நீதி வேண்டி நிற்கிறோம். கண்காட்சி நடைபெறும் இடத்தில் டென்மார்க் மற்றும் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
இக் கண்காட்சி நிகழ்வு நாளை (17.05.2026) Kong. Nytorv சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.