மூதூரில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது
Ad Space
Ad Space
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒருவர் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் எடையுடைய 'ஐஸ்' (Ice) போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space