மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு மோதி உயிரிழப்பு
Ad Space
Ad Space
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால் குழி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (17) பகல் இடம்பெற்ற விபத்தில் கட்டாக்காலி மாடு ஒன்று உயிரிழந்தது.
பிரதான வீதியை கடக்க முயன்ற கட்டாக்காலி மாடு, அவ்வேளை வேகமாக வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வாகனம் கடுமையாக மோதியதால், குறித்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
பிரதான வீதிகளில் கால்நடைகள் அலைந்து திரிவது தொடர்ச்சியான விபத்துகளுக்கு வழிவகுப்பதால், கால்நடை உரிமையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Ad Space
Ad Space