மூதூர் மஹாவலி கங்கையில் மூழ்கிய காவல் துறை விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் சடலமாக மீட்பு
Ad Space
Ad Space
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூதூர் - மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க வயது (39) என தெரியவருகிறது.
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோதுநீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space