கலாசாலையின் பிரதி முதல்வர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதி குகன் அதிதிப் பேச்சாளர் உரை நிகழ்த்தினார். கலாசாலையின் முதல்வர் லலீசன் நிறைவுரை நிகழ்த்தினார். அதிதி கலாசாலைச் சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டார். மே தினத்தை முன்னிட்டுக் கலாசாலை ஆசிரிய மாணவர்களின் பல்வேறு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
