மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மாணவன் பலி
Ad Space
Ad Space
பிலியந்தலை - மகரகம பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், அதன் பின்னர் மின்சாரக் கம்பம் ஒன்றிலும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர் அரவ்வல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பிலியந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space