மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்!
Ad Space
Ad Space
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் – 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space