யாழில் குப்பைக்கு வைத்த தீயால் நிகழ்ந்த விபரீதம்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது.
அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் நேற்றையதினம்(17.01.2026) சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு வெளியே சென்றுள்ளனர்.குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றி வீடு தீப்பற்றியுள்ளது.
இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space