யாழ் கோப்பாயில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2 ஆம் லெப்.மாலதி அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மண்ணின் உரிமைக்காகத் தன் இளமைக் காலத்திலேயே தன்னுயிரை ஈகம் செய்த முதல் பெண் ஆளுமை 2ஆம் லெப். மாலதி அக்கா அவர்களின் 39-ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.
இந்நாளை முன்னிட்டு, இன்று 10.10.2026 காலை 9:15 மணி அளவில் யாழ் கோப்பாயில் உள்ள அவரது நினைவிடத்தில் ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கத்துடன் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் செலுத்தப்பட்டது.