யாழ். நகரில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
Ad Space
Ad Space
தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24.07.2026) மாலை-04 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கடந்த-1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள-பௌத்தப் பேரினவாத ஆட்சியாளர்களால் திட்டமிட்டு இனப் படுகொலை அரங்கேற்றப்பட்ட 43 ஆவது ஆண்டில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும், இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space