யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
vidiyel 18 வைகாசி 2026 · 13:59 8 views
Ad Space
Ad Space
தமிழின அழிப்பை எடுத்துக்காட்டும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்டு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.