சுரபி கல்வி நுண்கலை நிறுவகத்தின் காகித விழா-2026 அண்மையில் யாழ்.குட்டியப்புலம் பகுதியில் அமைந்துள்ள கரிசல் மண்டபத்தில் சுரபி கல்வி நுண்கலை நிறுவகத்தின் நிறுவனர் திருமதி. சுகிர்தினி பிரபு தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் முன்னாள் மூத்த விரிவுரையாளரும், ஈழத்தின் முன்னணி நாடக மற்றும் அரங்கவியலாளருமான கலாநிதி.க. சிதம்பரநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.



2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்த நான்கு மாணவர்களும், 2026 ஆம் ஆண்டு தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் ஒருவரும் கௌரவிக்கப்பட்டனர்.


மாணவர்கள், ஆசிரியர்களின் பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்கிய விம்பம் என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. மாணவர்களின் பல கலை நிகழ்வுகளும் அரங்கேறின.கந்தர்மடம் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரின் குழுப் பறை இசை நிகழ்வு அரங்கேறி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகமூட்டியது.

அத்துடன் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்பித்த மூத்த சங்கீத ஆசிரியை கலாவல்லி, இளம் கணித ஆசிரியை தரணியா அருளானந்தம் ஆகியோரும் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.


