யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள இரண்டு மேம்பாலங்களையும் இடித்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கஸ்தூரியார் வீதியில் , நவீன சந்தை கட்டட தொகுதியை இணைக்கும் இரண்டு மேம்பாலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் , ஒரு பாலத்தின் சிறு பகுதி இடிந்து விழுந்திருந்தது.
அதனை தொடர்ந்து பாலத்திற்கு கீழான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டு இருந்தது
இந்நிலையில் குறித்த பாலம் தொடர்பில் நிபுணத்துவ பொறியியலாளர்களின் அறிக்கைகள் மற்றும் சிபாரிசின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மாநகர சபை மராமத்து குழு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற போது , இரண்டு மேம்பாலத்தையும் இடித்து அகற்றுவதாக தீர்மானிக்கப்பட்டது.
அதனை அடுத்து இரண்டு மேம்பாலங்களையும் இடித்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




