முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மக்கள்  பணத்தைத்  தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் லண்டன் பிரயாணத்தின் போது அரசாங்க பணத்திற்கு 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இழப்பீடு ஏற்படுத்தப்பட்டதாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதற்குரிய ஆவணங்கள் மேலதிக நடவடிக்கைக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்றையதினம் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளன.