ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
vidiyel 19 சித்திரை 2026 · 15:32 6 views
Ad Space
Ad Space
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, சமூகசெயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை சிவகுரு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.