சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம், மண்டபம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து, சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனர் வேல்விழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் விஞ்ஞானி முனைவர் ஜக்விர் சிங், இந்திய கடற்படை கமாண்டிங் அதிகாரி ராஜேஷ், இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தின் விஞ்ஞானி வெங்கட் பிரசாத்,ராமேசுவரம் துறைமுக அலுவலர் மானேக்ஸா, மீன்வளத்துறை ஆய்வாளர் விஷால், ஓலைக்குடா கிராம தலைவர் ஜெரோன் குமார், மண்டபம் மெரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், அகில இந்திய யாத்ரீகர்கள் பணியார்கள் சங்க தலைவர் கண் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தங்கச்சிமடம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், இந்திய கடற்படை அதிகாரிகள் , மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 98 நபர்கள் கலந்து கொண்டு கடலோரம் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் 515 கிலோ சேகரிக்கப்பட்டு ராமேசுவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.மண்டபத்தில் உள்ள கடற்கரை பூங்காவில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மீன்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானி நவீன் குமார், வனத்துறை மாவட்ட அதிகாரி கோபிநாத்,வனத்துறை அலுவலர் ஜினோ, மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மீனவர் சங்கத்தலைவர் ஜாகீர் உசைன் மற்றும் 250 தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக், பேய்வலைகள் உள்பட 1.8 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மண்டபம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.