ருமேனிய வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பண மோசடி
Ad Space
Ad Space
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு ஒரு கோடி 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த பெண்ணாெருவர் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ருமேனியாவில் பணியாற்றிய பெண்ணொருவரால், அந்த நாட்டுடன் இருந்த தொடர்புகளை பயன்படுத்திக்கொண்டு, ருமேனியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்த பிரகாரம் தொழில் பெற்றுத்தரவில்லை என பணியகத்துக்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த முறைப்பாடுகளுக்கமைய, சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்காக விசாரணை மேற்கொண்டபோதும், சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளை தவிர்த்து மறைந்து வந்துள்ளார். சந்தேக நபர், பிலியந்தலை, வெல்லம்பிடிய, கொலன்னாவை மற்றும் கஹகுடுவ போன்ற பிரதேசங்களில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவவை கைது செய்வதற்காக பல சந்தர்ப்பங்கள் சுற்றிவலைப்பு மேற்கொண்டபோதும், அதிகாரிகள் உரிய இடத்தை நேருங்குவதற்கு முன்னர், குறித்த பெண். அந்த இடங்களில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்த வியாபாரத்துக்காக சந்தேக நபருக்கு உதவி செய்த 4பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகளால் மாற்றுப்புலனாய்வு நபர் ஒருவரை பயன்படுத்திக்கொண்டு, குறித்த பெண்ணை தொடர்புகொண்டதுடன் அதன் பிரகாரம் குறித்த பெண், மாற்று புலனாய்வு நபருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக கொலன்னாவை பிரதேசதில் சட்டத்தரணி ஒருவரின வீட்டுக்கு வருமாறு குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்கள் மேலும் இருக்கின்றதா என தேடிப்பார்ப்பதற்கு பணியகத்தினால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space