ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்
Ad Space
Ad Space
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ‘ரூ.258 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகியுள்ளது’ என திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ஆதவ் அர்ஜுனா தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், திமுக ஐ.டி. பிரிவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியபிரகாசம், ஆர்.மோகன் பார்த்தசாரதி ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘அமலாக்கத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ எனது உறவினர் அல்ல.
இது சம்பந்தமாக எனது உறவினர் ஜான் பிரிட்டோ ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரூ.1 கோடிமான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space