முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொழிலதிபரிடமிருந்து பத்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபை தொடர்பான விடயமொன்றை இலகுபடுத்துவதற்காக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறித்த இலஞ்சத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த இலஞ்சப்பணம் அவருக்கு 2013ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஆணைக்குழு நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மன் யாப்பா மீது ரூ.10 இலட்சம் இலஞ்ச வழக்கு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space