வங்​கதேசத்​தில் பெரிய அளவி​லான மதவாத வன்​முறைகள் எது​வுமின்றி, சமீப ஆண்​டுகளில் இல்​லாத அளவுக்கு மிகச்​சிறப்​பாகத் துர்கா பூஜை திரு​விழா நிறைவடைந்​துள்​ளது. தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான வங்​கதேச தேசி​ய​வாதக் கட்சி (பிஎன்பி) அரசு பதவி​யேற்ற பிறகு நடை​பெற்ற முதல் துர்கா பூஜை இது​வாகும்.

“சமீபகால நினைவு​களில் இதுவே மிகச்​சிறந்த துர்கா பூஜை” என்று அந்​நாட்டு இந்து சமூகத்​தினர் மகிழ்ச்​சி​ தெரி​வித்​துள்​ளனர். கடந்த 2024, 2025-ம் ஆண்​டுகளில் முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால ஆட்​சி​யில், இந்து கோயில்களில் சிலை உடைப்பு, இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் உட்​பட குறைந்​தது 84 வன்​முறை சம்​பவங்​கள் பதிவாகி​யிருந்​தன.

அதற்கு முந்​தைய ஷேக் ஹசீனா ஆட்​சி​யிலும் இத்​தகைய தாக்குதல்​கள் தொடர்ந்து பதிவாகி வந்​தன. ஆனால் இந்த முறை, காவல்​ துறை, எல்​லைக் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை அடங்​கிய மூன்​றடுக்​குப் பாது​காப்பு போடப்​பட்​டது. விழா தொடங்கு​வதற்கு முன்பே படைகள் குவிக்​கப்​பட்​ட​தால் அசம்பாவிதங்​கள் தவிர்க்​கப்​பட்​டன.

மேலும், பூஜைக்​கான விடு​முறை நாட்​கள் அதி​கரிக்​கப்​பட்டு, கூடுதல் நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டது. பிரதமர் தாரிக் ரஹ்மானும் அமைச்​சர்​களும் விழா பந்​தல்​களுக்கு நேரில் சென்​றனர். இதனால் நாடு முழு​வதும் பூஜைகள் கோலாகலமாக நடந்​தன. கடந்த ஆண்​டை​விட சுமார் 500 கூடுதலாகி, மொத்​தம் 33,851 இடங்​களில் விழா கொண்​டாடப்​பட்​டது.