வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்
Ad Space
Ad Space
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட்ட இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் மழை இன்று (14.05.2026) முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இன்றைய தினமும் (14.05.2026), மேற்கு, வடமேற்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நாளையதினம் இரவு வரை(15.05.2026) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் அதுவரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
Ad Space
Ad Space