வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!
Ad Space
Ad Space
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Ad Space
Ad Space