வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எங்கும் காணிகளைக் கைப்பற்றவில்லை என்றும், மாறாகத் தேசிய பாதுகாப்புக் கருதி அவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர சபையில் தெரிவித்தார்.
இந்த வருடம் மாத்திரம் மன்னார் மாவட்டத்தில் 1,400 ஏக்கர் அரச காணிகளும், 19 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, அங்குள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் சபையில் விளக்கமளித்தார்.