வடக்கு- கிழக்கில் ஞாயிறன்று பரவலாக மழை!
Ad Space
Ad Space
வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக் குறைந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தற்போது வடக்கு மாகாணத்தினை அண்மித்து நிலை கொண்டுள்ளது. இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமையும் (25.01.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மிதமான (சில இடங்களில்) மற்றும் சற்றுக் கனமாக (சில இடங்களில்) கிடைத்து வரும் மழை எதிர்வரும்-27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை தொடரும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (24.01.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் அறுவடைக்குப் பின்னான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும்-27 ஆம் திகதி வரை தமது செயற்பாடுகளைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space