1976 ஆம் ஆண்டு மே மாதம்-14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வியாழக்கிழமை (14.05.2026) இரவு மேற்படி அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் தமிழ்தேசிய, சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள், கல்வியிலாளர்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த வரலாற்று நிகழ்வில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.