வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை, ஹெந்தலை பகுதியில் மேற்கு மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ கிராம் 545 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் ஹெந்தலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபராவார்.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவரும், 25 வயதுடைய யுவதி ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கு மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.