நாசாவின் (NASA) வாயேஜர்-1 (Voyager 1) விண்கலம் மனிதகுல வரலாற்றில் முதன்முறையாகப் பூமியிலிருந்து ‘ஒரு ஒளி-நாள்’ (One Light-Day) தொலைவை எட்டி வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளது.

விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-1 (1977) , 49 ஆண்டுகளுக்கு முன்பு வியக்க வைக்கும் தூரமான தற்போது பூமியிலிருந்து 1,600 கோடி மைல்களுக்கு (2,600 கோடி கி.மீ.) அப்பால் விண்மீன்களுக்கு இடையிலான வெளியில் (Interstellar Space) பயணித்து வருகிறது. இந்த மைல்கல்லை எட்டும்போது, விண்கலத்திலிருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் ஒளியின் வேகத்தில் பயணித்து பூமியை வந்தடைய சரியாக 24 மணி நேரம் ஆகும்.

நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தில்  மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம், ஒரு முழு 'ஒளி-ஆண்டு' (Light-year) தூரத்தை எட்ட இன்னும் 18,000 ஆண்டுகள் ஆகும்.

இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடும் வகையில், செவ்வாய்க்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் செல்போன் அல்லது டார்ச் லைட்டைப் பயன்படுத்தி, வாயேஜரின் குறியீடான 'V-G-R' என்ற எழுத்துக்களை மோர்ஸ் குறியீடு (Morse code) மூலம் இரவு வானில் ஒளிரச் செய்யுமாறு நாசா கேட்டுக்கொண்டுள்ளது.

வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களைக் கடந்து சென்ற வாயேஜர்-1, 1990-ல் பூமியின் புகழ்பெற்ற "வெளிர் நீலப் புள்ளி" (Pale Blue Dot) புகைப்படத்தை எடுத்தது. மேலும், வேற்றுகிரக வாசிகளுக்காக 55 மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் மற்றும் பூமியின் படங்கள் அடங்கிய 12-அங்குல தங்க இசைத்தட்டையும் (Golden Record) இது சுமந்து செல்கிறது.

"வாயேஜர்-1 விண்மீன்களுக்கு இடையே பயணிக்கும் பூமியின் தூதுவர் ,  இது ஒரு தேசியப் பொக்கிஷம்," என இத்திட்டத்தின் மேலாளர் சுசேன் டாட் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வாயேஜர்-1 விண்கலத்தின் இரட்டையான வாயேஜர்-2, 2035-ஆம் ஆண்டில்தான் இந்தத் தொலைவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.