வருமானவரித் துறையில் கடவுச் சொல்லை திருடி முறை கேடாக டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற்ற விவகாரத்தில், காவல் ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரியான அவரது சகோதரர் ஆகியோ ருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகவும், இவரது தம்பியான பிரசாத்குமார் வருமான வரித்துறையில் மூத்த உதவி அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் தங்களது தாயார் மணிமேகலையுடன் சேர்ந்து கடந்த 2015 முதல் 2019 வரை தாக்கல் செய்த வருமானவரி கணக்குக்கான டிடிஎஸ் தொகையாக ரூ.22.14 லட்சத்தை வருமானவரித் துறையின் கடவுச் சொல்லை திருடியும், போலியாக கணக்கு காண்பித்தும் திரும்பப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக, வருமானவரித் துறை உதவி ஆணையர் கடந்த 2019 டிசம்பரில் சிபிஐக்கு புகார் அளித்தார்.
வருமானவரித் துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு: காவல் ஆய்வாளர், சகோதரருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space