வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பௌவுசர் மூலம் குடிநீர் விநியோகம்
Ad Space
Ad Space
நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாக, குறைந்த நீர் விநியோகத்தைக் கொண்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக பௌவுசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகத் தடைகள் காணப்படுமாயின், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக '1939' என்ற துரித இலக்கத்திற்கு அறியத்தருமாறு நீர் வழங்கல் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடரும் வறண்ட வானிலைக்கு மத்தியில், சுத்தமான குடிநீருக்கான அணுகலை உறுதி செய்வதே தங்களின் முதன்மையான பொறுப்பு என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
Ad Space
Ad Space