விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பினர் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையுடன் இணைந்து நான்காம் கட்டமாக  முன்னெடுத்த பிளாஸ்ரிக் ஒழிப்புச் செயற்திட்ட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) யாழ்.இளவாலையில் நடாத்தப்பட்டது.  

மேற்படி செயற்திட்ட நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பின் செயற்பாட்டாளர்கள், வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் வடக்குப் பிரதேச சபை ஊழியர்கள், இளவாலை நியூ மற்ஸ் அக்கடமி மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்றுக் காலை-07.30 மணியளவில் இளவாலைக் கிராமிய வைத்தியசாலையில் ஆரம்பமாகிய பிளாஸ்ரிக் ஒழிப்பு நிகழ்வு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின்  எல்லைப் பகுதியான நாவலடிச் சந்தி வரை சென்று மீள இளவாலை சித்திரமேழி சந்தியூடாக ஆலடிச் சந்தி வரை பிளாஸ்ரிக், பொலித்தீன்கள் என்பன அகற்றித் தூய்மையாக்கப்பட்டதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.