தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதன்போது இரண்டு கேக்குகள் வெட்டப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன் எள்ளுப்பாகு மற்றும் சொக்லேட்டுகளும் வழங்கப்பட்டன. மேலும், பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் இந்தப் பிறந்தநாள் நிகழ்வுகளை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தார்.
.